போலி சான்றிதழுடன் மருத்துவ சீட் கேட்ட மாணவன் - வசமாக மாட்டிவிட்ட அதிகாரி - சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-10-31 02:36 GMT

போலி சான்றிதழுடன் மருத்துவ சீட் கேட்ட மாணவன் - வசமாக மாட்டிவிட்ட அதிகாரி - சென்னையில் அதிர்ச்சி

நீட் தேர்வில் 129 மதிப்பெண் எடுத்து விட்டு 698 மதிப்பெண் எடுத்து போல், போலி சான்றிதழை தயாரித்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த லக்சை என்பவர், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு கடந்த 29 ஆம் தேதி பெற்றோருடன் சென்றார். தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 698 மதிப்பெண் எடுத்துள்ளதாகவும், தனக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான அனுமதி இருப்பதாகவும் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். மாணவர் லக்ஸ் வைத்திருந்த சான்றிதழ்களை பார்த்த போது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, "நீங்கள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு செல்லுங்கள், உடனே கிடைத்து விடும்" என்று அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவ அதிகாரிகள் உடனே கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணை மருத்துவ கல்வி இயக்குனரிடம்

தெரிவித்து விட்டனர். இதனை அறியாமல் லக்ஸ் நேரிடையாக சென்றபோது சிக்கிக்கொண்டார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நீட் தேர்வில் எடுத்த129 மதிப்பெண்ணை, 698 மதிப்பெண்ணாக மாற்றி போலி சான்றிதழ்கள் தயார் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலி சான்றிதழை தயாரித்து கொடுத்தது திருவான்மியூரில் உள்ள அடையார் ஸ்டூடன்ட் ஜெராக்ஸ் கடையின் ஊழியர் மற்றும் பாலவாக்கத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி ஊழியர் பாத்திமா என்பவரையும்

போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்