நாடே வியக்கும் அரசு மருத்துவமனை...சாமானியனுக்கு சர்வதேச சிகிக்சை - தடமின்றி மறைக்கும் -ட்ரீட்மெண்ட்

Update: 2024-10-19 13:22 GMT

இந்தியாவில் தீக்காய சிகிச்சைக்கான 2வது பெரிய மருத்துவமனையாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது..

1973-ஆம் ஆண்டு 75 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காய பிரிவு துவங்கப்பட்ட நிலையில், இடைவிடாது 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இந்த பிரிவு இயங்கி வருகிறது...

5 வெண்டிலேட்டர் கருவிகளுடன், 20க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் இயங்கி வரும் இந்த தீக்காய சிகிச்சைக்கான பிரிவில், முதல் முறையாக தமிழக அரசின் முன்னெடுப்பில் சுமார் 8.80 கோடி செலவில் அதி அழுத்த ஆக்சிஜன் மற்றும் லேசர் சிகிச்சை முறை பயன்பாட்டுக்கு வர இருக்கிறது....

அரசின் மக்கள் நலன் சார்ந்த இந்த முன்னெடுப்பு மூலம், குறைவான நாள்களிலே தீக்காயமடைந்தவர்கள் சிகிச்சையில் இருந்து குணமாகலாம் என கூறும் மருத்துவர், குணமான பின் ஏற்படும் தழும்புகளை சரி செய்யவும் பெரும் பொருட் செலவில் லேசர் சிகிச்சை கருவிகள் வாங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்..

Tags:    

மேலும் செய்திகள்