சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு - வெளிவந்த பின்னணி

Update: 2024-02-26 02:27 GMT

சென்னை மாநகர் மற்றும் புறகர் பகுதிகளில் நடைபெற்றும் வரும் வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகளையும், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளையும், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிருகம்பாக்கம், கொளப்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் முடிக்கப்படும் என்றார். பணிகள் முடிந்த பின்னர் அப்பகுதிகளில் வெள்ள பாதிப்பு இருக்காது எனவும் அவர் தெரிவித்தார். அடையாறு ஆற்றில் இருந்து மழைநீர் வெளியேறாமல் ஷட்டர்ஸ் அமைக்கும் பணி, ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளதாக அவர் கூறினார். வேளச்சேரி, தாம்பரம் நெடுஞ்சாலையிலிருந்து பள்ளிக்கரணை சதுப்புநிலத்திற்கு, மழைநீரை கொண்டு செல்தவற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும், சிவ்தாஸ் மீனா குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்