"ஹாஸ்பிட்டலே இல்லை.." - மகாபலிபுரம்-ராயப்பேட்டை இதான் நிலையா?. "அநியாயமாக பிரிந்த சிறுவன் உயிர்"

Update: 2024-09-03 16:21 GMT

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடர்ந்து இயங்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வந்தது. சமீபத்தில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவமனை ஜிஎஸ்டி சாலை சிங்கப்பெருமாள் கோயில் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் போதிய உபகரணங்களும் இல்லை, மருத்துவர்களும் இல்லை என மக்கள் ஆதங்கம் தெரிவித்து வந்தனர். திங்கள் கிழமை நீச்சல் குளத்தில் விழுந்த 3 வயது குழந்தை ரித்தீஷ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது, போதிய உபகரணங்கள் இல்லாததால் குழந்தை சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்ததாக மக்கள் குற்றம் சாட்டினர்.

மக்கள் முற்றுகை போராட்டம் தொடங்கிய வேளையில், பெத்தேல் நகர் பகுதியிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட சாந்தி என்பவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்தியவர்கள், ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடர்ந்து இயங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்