ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ஓட ஓட விரட்டி வெட்டிய இளைஞர்..- சென்னையில் அதிர்ச்சி..

Update: 2024-03-20 02:17 GMT

மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவர், அவரை சென்னை, கிண்டி ரயில் நிலையத்தில் வைத்து ஓட ஓட விரட்டி கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, கிண்டி ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவரை, இளைஞர் விரட்டி விரட்டி கத்தியால் வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சம்பந்தப்பட்ட இளைஞரை மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில் இருவரும் தம்பதி என்பது தெரியவந்தது. சென்னை பிராட்வேயை சேர்ந்த வெங்கடேசன் தன் மனைவியான பானுமதியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு அவருடன் மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், தன் உறவினரை பார்ப்பதற்காக கிண்டி ரயில் நிலையம் வந்த பானுமதியை வெங்கடேசன் சந்தேகப்பட்டு கத்தியால் தாக்கியது தெரியவந்தது. படுகாயமடைந்த பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இளைஞரை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்