சென்னை, ஜி.எஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிண்டியில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் பணி முடிந்து வீடு திரும்பும் ஊழியர்கள் மற்றும் கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.