நடுரோட்டில் நடந்த நகை சேல்ஸ்.. ஆபீஸ் வந்ததும் ஷாக்கான ஓனர்.. சென்னை டூ நார்த் இந்தியா

Update: 2024-10-25 09:29 GMT

நடுரோட்டில் நடந்த நகை சேல்ஸ்.. ஆபீஸ் வந்ததும் ஷாக்கான ஓனர்.. சென்னை டூ நார்த் இந்தியா

சென்னையில் வாங்கிய நகைக்கு பணத்திற்கு பதிலாக வெள்ளை பேப்பரை கொடுத்து மோசடி செய்த நபரை மும்பையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கடந்த 20ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற நகை கண்காட்சியில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் நகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதனை பார்த்து, ராகேஷ் ஜெயின் என்ற பெயரில், தான் நகை வியாபாரி எனக்கூறி 320 கிராம் எடை நகைகளை ஆர்டர் செய்துள்ளார். தன்னால் நேரில் வரமுடியாது எனக்கூறி, நண்பர் மூலம் வாங்கிக்கொள்வதாக கூறி கடந்த 22ஆம் தேதி பணத்தை கொடுத்து நகையை பெற்றுள்ளார். சாலையில் பணத்தை எண்ண முடியாது என்பதால், அலுவலகத்திற்கு வந்து சோதனையிட்ட போது வெறும் வெள்ளை தாள்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி அடிப்படையில் பணம் வாங்கிய நபர் சோலாப்பூருக்கு ரயிலில் தப்பிச்சென்றது தெரியவந்தது. ஆர்.பி.எப் உதவியுடன் போலீசார் கல்லூராம் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் இதேபோல பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்