சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் நிதி ஆலோசனை வழங்கும் அலுவலகத்தில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சில வங்கிகளுடன் இணைந்து நிறுவனங்களுக்கு நிதி ஆலோசனை வழங்கும் அலுவலகமாக அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒருநாள் முழுவதும் நீடித்த சோதனையின் முடிவில், விதிகளுக்கு புறம்பாக அந்நிறுவனம் செயல்படவில்லை என உறுதி செய்யப்பட்டு, அமலாக்கத்துறையினர் சோதனையை முடித்துக் கொண்டனர். அதிகாரிகள் எதையும் பறிமுதல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.