சென்னை குரோம்பேட்டையில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வைத்திருந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த விஜய் மற்றும் ஜாஸ்மின் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் ஆன்லைனில் குறைந்த விலைக்கு போதை மாத்திரைகளை வாங்கி, அதிக விலைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், வீட்டில் வைத்திருந்த 300 போதை மாத்திரைகள், அரை கிலோ கஞ்சா மற்றும் 32 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.