தமிழகத்தை பரபரப்பாக்கிய கொலை.. ஈபிஎஸ் கண்டனம்

Update: 2024-07-06 03:37 GMT

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆழ்ந்த இரங்களையும், கண்டனங்களையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படும் அளவிற்கு, திமுகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லையென்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில், தொடர்ச்சியாக குற்றங்கள் நிகழ்வதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்