சென்னை திருவொற்றியூரில் 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி ஐடி ஊழியர் ஒருவரை போலீசார் போக்சோவின் கீழ் கைது செய்துள்ளனர். வினோத்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்ட இந்த சம்பவத்தில், பணிச்சுமை காரணமாக தம்பதி இருவரும் குழந்தையை வினோத்குமாரிடம் ஒப்படைத்து சென்ற நிலையில், இளைஞர் அத்துமீறி இருக்கிறார். குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞரை போக்சோவின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.