குளியல் அறையில் உயிர் பிரியும் முன் நடந்த கொடூரம்...தஞ்சை சிறுமி படுகொலையில் இறுதி நொடி திகில்
குளியல் அறையில் உயிர் பிரியும் முன் நடந்த கொடூரம்... சென்னையில் தஞ்சை சிறுமி படுகொலையில் இறுதி நொடி திகில்
பள்ளிக்கூடம் போக வேண்டிய வயதில், அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலைகள் செய்து வந்த சிறுமி, மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கைதான நிலையில், திடுக்கிடும் பின்னணி வெளியாகி இருக்கிறது. பார்க்கலாம்.. விரிவாக..
அமைந்தகரையில் உள்ள சதாசிவ மேத்தா சாலையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான், இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது..
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், சில ஆண்டுகளாகவே, இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலைகளை செய்து வந்திருக்கிறார்..
முன்னதாக, தனது தந்தையை இழந்த சிறுமி, தாயாரின் அரவணைப்பிலேயே வளர்ந்து வந்திருக்கிறார். குடும்ப சூழல் காரணமாக, ஓராண்டுக்கும் மேலாக, தாயைப் பிரிந்து முகமது நவாஷ் என்பவரது வீட்டில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
உயிரிழந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.. இதன் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ் - நாசியா தம்பதி. இவர்களுக்கு 6 வயதில் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், 14 மாதங்களுக்கு முன்பு, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை முகமது நவாஷ் வீட்டு வேலைக்காக தனது சகோதரி மூலம் பணியில் அமர்த்தியுள்ளார்.
தொடர்ந்து, கணவன் மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீபாவளியன்று காலை சிறுமியை முகமது நவாஷும், அவரது மனைவி நாசியாவும் மற்றும் இவர்களது நண்பரான லோகேஷ் ஆகியோர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் நிலைக்குலைந்த சிறுமி, மூர்ச்சையாகி மயக்கம் அடைந்திருக்கிறார். இதனால், என்ன செய்வது எனத் தெரியாமல் 3 பேரும் சிறுமியை தர தரவென இழுத்துக் கொண்டுபோய், குளியல் அறையில் போட்ட சற்று நேரத்தில் பிரிந்திருக்கிறது சிறுமியின் உயிர்...
இதனால், 3 பேரும் பயத்தில் குளியல் அறைக்குள்ளே சிறுமியின் உடலுக்கு வெறும் வத்திக்குச்சிகளைக் கொளுத்தி வைத்து விட்டு உறவினர்களின் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்திருக்கின்றனர்..
பின்னர், இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் மூலம் போலீஸூக்கு தகவல் அளித்து உள்ளனர்.
இதனால், 3 பேரும் பயத்தில் குளியல் அறைக்குள்ளே சிறுமியின் உடலுக்கு வெறும் பத்திக்குச்சிகளைக் கொளுத்தி வைத்து விட்டு உறவினர்களின் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சிறுமின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என சமூக ஆர்வலர் மகேந்திர பூபதி வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, கணவன் மனைவியை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இவர்களது நண்பர் லோகேஷை வலைவீசித் தேடி வருகின்றனர்..
சிறுமியின் உடலில் சிகரெட்டினால் சூடுபோட்டது உள்ளிட்ட பல காயங்கள் இருப்பதால், அவர் பாலியல் ரீதியாக ஏதும் துன்புறுத்தப்பட்டாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்..
இத்தனையும் செய்துவிட்டு சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக வீட்டின் உரிமையாளர்கள் நாடகமாடியதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது..
பள்ளியில் படிக்க வேண்டிய வயதில், 18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை, பணியில் அமர்த்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்ற சூழ்நிலையில், எப்படி வீட்டு வேலைக்காக இந்த சிறுமி பணி அமர்த்தப்பட்டார்? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது...