குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அதிர்ச்சி.. களத்தில் இறங்கிய சென்னை போலீஸ்

Update: 2024-08-22 02:16 GMT

சென்னை மயிலாப்பூரில், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக பூட்டை உடைத்து 19 பழுதடைந்த செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

மயிலாப்பூர், அபிராமிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அலுவலக பயன்பாட்டுக்காக சில ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டு பழுதடைந்த செல்போன்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த நிலையில், திருடப்பட்டிருக்கிறது. புகாரின் அடிப்படையில், சம்பவம் குறீத்து வழக்குபதிவு செய்திருக்கும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்