சென்னை மக்களை பதறவைத்த சம்பவத்தில் அடுத்த ஸ்கெட்ச் - பிளானை சொன்ன அருண் IPS

Update: 2024-09-06 03:32 GMT

சென்னையில் குற்றங்கள் தொடர்ச்சியாக குறைந்து கொண்டிருப்பதாக மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சைபர் கிரைம் குற்றவாளிகள், கம்போடியாவில் இருந்து குற்றச் செயல்களை அரங்கேற்றி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் பள்ளிகள், கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு டார்க் நெட் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், குற்றவாளிகளைக் கண்டறிய இண்டர்போல் உதவியை நாடி இருப்பதாகவும் அவர் கூறினார்.

போதைப்பொருள் விநியோகம் இந்தியா முழுவதும் நடைபெறும் நிலையில், அதனை தமிழகத்தில் தடுக்கும் பணியை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் குற்றங்கள் தொடர்ச்சியாக குறைந்து கொண்டிருப்பதாகவும், தாம் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 மாதங்களில் மட்டும் 150 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்