என்கவுன்ட்டர் குற்றச்சாட்டு - எஸ்பி பரபரப்பு விளக்கம்

Update: 2024-10-03 04:48 GMT

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை கைதியான அவரை தனி அறையில் வைத்து கொடுமைப் படுத்தப்படுவதாகவும், என்கவுன்ட்டர் செய்து விடுவோம் என்று ஜெய்லர் மிரட்டுவதாகவும் ரவுடி ராதாவின் மனைவி தீபிகா குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் மறுப்பு தெரிவித்துள்ளார். ரவுடி ராதாவின் மனைவி கூறிய புகாரில் உண்மை தன்மையில்லை என்றும்

விதிகளின்படியே அனைத்து கைதிகளும் நடத்தப்படுகிறார்கள் எனவும் பரசுராமன் கூறியுள்ளார்.

ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்