சென்னையை அதிர வைத்த மெகா மோசடி... பல கோடிகளை கொட்டி கதறும் மக்கள்

Update: 2024-08-07 04:56 GMT

45 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனர்கள் மோகன் மற்றும் சுப்ரமணியன் ஆகிய இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வரும் சந்ததா சங்க நிதி நிறுவனத்தின் இயங்குனர்களான மோகன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் அதிக வட்டி தருவதாக கூறி 500க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை பெற்றுள்ளனர். முதிர்ச்சி அடைந்த பிறகும் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் பாதிக்கப்பட்ட 564 பேர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் மோகன், சுப்பிரமணியன், வெங்கட்ராமன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதலீட்டாளர்களிடமிருந்து 45 கோடி ரூபாய் அளவில் இந்நிறுவனம் மோசடி செய்திருப்பது தெரிய வந்ததை அடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் மோசடி செய்த இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மோகன் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்