திடீரென படையெடுத்த சென்னை மக்கள்.. ஸ்தம்பித்து போன GST சாலை | TN Traffic | Thanthitv

Update: 2024-07-21 02:37 GMT

 சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வார விடுமுறை, பௌர்ணமி மற்றும் ஆடி மாத முதல் ஞாயிறு என தொடர் விசேஷங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி செல்லும் மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதேபோல், செங்கல்பட்டு பரனூர் சுங்க சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பௌர்ணமி தினம் என்பதால் சென்னையில் உள்ள ஏராளமான சிவ பக்தர்கள் திருவண்ணாமலையை நோக்கி படையெடுத்தனர். இதனால், பரனூர் சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்