தனிமையில் தெரியாத 'அந்த' விஷயம்காரியம் முடிந்ததும் தெரிந்ததா? - காதலனை கதிகலங்க விட்ட காதலி
தனிமையில் தெரியாத 'அந்த' விஷயம்காரியம் முடிந்ததும் தெரிந்ததா? - காதலனை கதிகலங்க விட்ட காதலி
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்பு இளம் பெண், தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நாகர்கோயிலைச் சேர்ந்த சந்தோஷும், மதுரையைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி, அந்த பெண்ணை தனிமையில் சந்தித்த சந்தோஷ், பின்னர் சாதியை காரணம் காட்டி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சந்தோஷ் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அந்த பெண் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.