திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஓட்டுநர் பிரகாஷ் நோ பார்க்கிங் பகுதியில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்ததால் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் 5 ஆயிரம் அபராதம் விதித்து ஆட்டோவை பறிமுதல் செய்து பின்னர் ஒப்படைக்கப்பத்தனர். அபராதத்தால் மனமுடைந்த பிரகாஷ் செல்போன் டவர் மீது ஏறி த*கொலை மிரட்டல் விடுத்தார்... அதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர் கீழே இறங்கி வந்தார்.
போலீசார் பிரகாஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர்கள் 100க்கும் மேற்பட்டோர் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெகு சாதாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதாகவும் இதனால்
தங்களின் வாழ்வாதாரம் பாதித்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். உடனடியாக இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.