கூலி கேட்டதால் ஆத்திரம்.. ஓனரை கட்டையாலயே அடித்த தந்தை, மகன்.. பதறவைக்கும் CCTV வீடியோ

Update: 2024-09-01 14:51 GMT

ஈரோடு அசோகபுரம் கொத்துக்காரர் தோட்டம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட விசைத்தறிகளை வைத்து அம்மன் டெக்ஸ் என்ற பெயரில் விசைத்தறி கூடம் நடத்தி வருபவர் நந்தகுமார்.

இவரிடம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேர்ந்த சிவன் டெக்ஸ் உரிமையாளர் குமார் துணிகளை உற்பத்தி செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார்.

ஆனால் உற்பத்தி செய்த துணிகளுக்கு கூலி பணம் தராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த 30ம் தேதி என்று இரவு நந்தகுமாரின் விசைத்தறி கூடத்திற்கு வந்த பள்ளிபாளையத்தைச் சேர்ந்த குமார் மற்றும் அவரது மகன் விக்ரம் ஆகியோர் உற்பத்தி செய்த துணி வகைகளுக்கு கூலி தராமல் துணிகளை எடுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும் தன்னுடன் வந்த நபர்களுடன் சேர்ந்து நந்தகுமாரை கட்டையால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் விசைத்தறி கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி யில் பதிவாகி இருந்தது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு காவல் துறையினர் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த சிவன் டெக்ஸ் உரிமையாளர் குமார் மற்றும் அவரது மகன் விக்ரம் மற்றும் உடன் வந்தவர்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக நந்தகுமார் கொடுத்த புகாரின்பேரில் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்