"என்ன மன்னிச்சு விட்ருங்க அண்ணே"..செய்யுற வேலையை செஞ்சுட்டு அப்படியே மாறிய முகம்.. | Viral Video

Update: 2024-11-26 14:00 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அடகு கடையில் போலி நகையை அடகு வைத்தவர் இனி தவறு செய்ய மாட்டேன் என கடை உரிமையாளரிடம் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. காந்தி பஜாரில் ராஜேஷ் என்பவரது அடகு கடைக்கு வந்த ராஜா என்ற ஆசாமி போலி மோதிரத்தை அடகு வைக்க முயன்ற நிலையில், அவரைப் பிடித்து விசாரித்த போது மேலும் கை வசம் 10 போலியான மோதிரங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ், ராஜாவை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரத்தில் நகை செய்யும் தொழில் செய்யும் பாபு என்பவர் போலி நகைகளைக் கொடுத்து அடகு வைத்து பணம் வாங்கி வருமாறு கூறியதாக ராஜா தெரிவித்தார்... இதையடுத்து போலீசார் பாபுவைத் தீவிரமாக தேடி வரும் நிலையில் ராஜா கடை உரிமையாளரிடம் நான் இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்