மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், காருக்குள் புகுந்த பாம்பை பிடிக்க 4 மணி நேரம் போராடியும், அது சிக்காததால் பாம்பு பிடி வீரர் ஏமாற்றமடைந்தார். ஆச்சாள்புரத்தை சேர்ந்த பாலாஜி என்பவரின் காரில் பாம்பு புகுந்த நிலையில், பாம்பு பிடி வீரரான பாண்டியன், காரின் ஒவ்வொரு பகுதியாக அகற்றி அதனை பிடிக்க முயற்சித்தார். எனினும் 4 மணி நேரம் போராடியும் பாம்பை பிடிக்க முடியாததால், பாம்பு பிடி வீரரும், காரின் உரிமையாளரும் ஏமாற்றமடைந்தனர்.