அமைச்சர் மகன் கார் மீது மோதிய கார்...அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

Update: 2024-05-13 01:54 GMT

திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை வழியாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது திருக்கோவிலூர் சாலையில் இருந்து வேலூர் நோக்கி மற்றொரு கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அமைச்சர் மகன் கார் மீது, எதிரே வந்த கார் மோதியது. இதனால் காரில் பயணம் செய்த அமைச்சர் மகன் மற்றும் ஓட்டுநர் இருவரும் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மற்றொரு காரில் வந்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி தப்பினர். இது தொடர்பான சிசிவிடி காட்சிகள் வெளியான நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்