பாஸ்டேக்கில் பணம் இல்லாதால், அரசு சிறப்பு பேருந்துகளை மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர். பத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. பயண தூரம் அதிகரித்து, நேரம் விரயம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்த பயணிகள், அடாவடி காட்டும் சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.