2019-ல் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த தரமான சம்பவம்... யார் இந்த பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங்?

Update: 2024-07-06 08:38 GMT

2019-ல் தமிழகத்தையே திரும்பி

பார்க்க வைத்த தரமான சம்பவம்

யார் இந்த பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங்?

நொடி பொழுதில் சரிந்த சாம்ராஜ்யம்

சல்லி சல்லியாக சிதறிய உடல்

வழக்கறிஞர் டூ தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் என அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்த ஆம்ஸ்ட்ராங்... நொடிப்பொழுதில் வெட்டிச் சரிக்கப்பட்டிருக்கிறார். அவர் கடந்து வந்த அரசியல் பாதையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... தமிழகத்தில் ஏற்படுத்திய அதே தாக்கத்தை தேசிய அளவிலும் ஏற்படுத்தி இருக்கிறது...

சாதாரண வழக்கறிஞராக தனது பயணத்தை தொடங்கி, ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக அவர் அசுர வளர்ச்சியடைந்ததை தற்போது வரை ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்த வழக்கறிஞர்கள் எண்ணி ஆச்சர்யப்படுவர்களாம்...

இந்த அசுர வளர்ச்சிக்கான திருப்புமுனை ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்வில் 2006 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கிறது...

2006 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்ட ஆம்ஸ்ட்ராங், தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாமன்ற உறுப்பினரான நிலையில், அதற்கடுத்த ஆண்டே தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்..

ஆம்ஸ்ட்ராங்கின் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்கான போராட்டம்... மக்கள் நல்வாழ்வு பணி... வழக்கறிஞர் என்ற அதிகாரம்.. அதனுடன் தனித்து நின்று போட்டியிட்டு சென்னை மாமன்ற உறுப்பினரானது போன்றவற்றால் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஒருவர் ஈர்க்கப்பட்டிருக்கிறார்...

அவராலையே அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு ஆம்ஸ்ட்ராங் மாநில தலைவராக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, 2011ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஆம்ஸ்ட்ராங்க் தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது..

இதனிடையே, கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மாயாவதியின் உத்தரவுக்கிணங்க... தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தணித்து போட்டியிட்டு வேட்பாளர்களை நிறுத்தியது யாரும் எதிர்பாராத ஒன்று...

இப்படி இருக்க... தொடர்ந்து பட்டியலின மக்களுக்காக குரல் கொடுத்து வந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரான மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்...

மாநிலத்தின் வலுவான தலித் குரலாக அறியப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும், குற்றவாளிகளை மாநில அரசு உடனடியாக தண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்...

தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சார்பிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கில் சரணடைந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்