லாரி ஓட்டுநர்கள் போராட்டம்.. பொலிவியாவில் பதற்றம்

Update: 2024-06-05 11:36 GMT

பொலிவியா நாட்டில் எரிபொருள் மற்றும் டாலர் தட்டுப்பாடு நிலவுவதை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே டாலர் புழக்கம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த பிரச்சினைகளை சரி செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, எரிபொருள் தட்டுப்பாட்டை கண்டித்து, அந்நாட்டு லாரி ஓட்டுநர்கள் எல் ஆல்டோ நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 48 மணிநேர மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தனர். இதனையடுத்து, லாரி ஓட்டுநர்கள் மீது ரப்பர் குண்டுகளை வீசி, கலைந்து போகச் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்