"இந்துத்துவா கோட்பாட்டை புகுத்த பாஜக முயற்சி" - காதர் மொஹிதின் விமர்சனம்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு சாலையில் இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் மண்டல பயிலரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர், காதர் மொஹிதின், பாஜக அரசு, இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டை மாற்றவும், இந்துத்துவா கோட்பாட்டை புகுத்தவும் முயற்சி செய்கிறது என விமர்சித்தார்.