"அடிக்கடி ஆய்வுக்கு வந்தால்.." உணவு பாதுகாப்பு அதிகாரியை மிரட்டிய பிரியாணி கடை உரிமையாளர்

Update: 2023-10-30 05:49 GMT

காஞ்சிபுரத்தில், அடிக்கடி ஆய்வுக்கு வந்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வேன் என, உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் பிரியாணி கடை உரிமையாளர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் புத்தேரி தெருவில் தமிம் அன்சாரி என்பவர், பிரியாணி ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருடைய ஹோட்டலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக அபராதம் விதித்து விட்டு, அசைவ உணவுகளை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். இந்நிலையல், உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வந்து ஆய்வு மேற்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தமிம் அன்சாரி, அடிக்கடி ஆய்வுக்கு வந்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார். மேலும், காஞ்சிபுரத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் சிக்கன் உணவு தயாரிக்க நிறம் சேர்க்கப்படுவதை காண்பிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்