8 வயது சிறுமியை சட்டவிரோதமாக தத்தெடுத்த பிக்பாஸ் பிரபலம் - சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ

Update: 2024-03-26 15:17 GMT

கன்னட பிக்பாஸ் பிரபலமான சோனு ஸ்ரீநிவாஸ் கவுடா, எட்டு வயது சிறுமியை சட்டவிரோதமாக தத்தெடுத்ததாகவும், அதனை சமூக ஊடகங்களில் பயன்படுத்தி தன்னை விளம்பரப் படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, குழந்தை நல அதிகாரிகள் மற்றும் போலீசார், சோனுவிடம் விசாரித்தபோது, உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல், சிறுமியை தத்தெடுத்ததும், விளம்பரத்திற்காக, சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, சோனு இடம் இருந்து சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். மேலும், சோனு ஸ்ரீநிவாஸ் கவுடா மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்