விடாமல் அடித்து வெளுத்த கனமழை - "இந்த பகுதியில் கொஞ்சம் பத்திரமா போங்க.."

Update: 2023-08-24 15:01 GMT

சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் இரும்புலியூரில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. முழங்கால் அளவிற்கு தேங்கி நின்ற மழை நீரால், நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். தற்போது தண்ணீர் வடிந்துள்ளதால், அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்