கோவையை உலுக்கிய நகைக்கடை கொள்ளை-அடி ஆழம் வரை தோண்டி எடுத்த போலீஸ்-விசாரணையில் வெளியான பகீர் பின்னணி
கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 28 ஆம் தேதி 200 சவரன் நகைகளை தனிநபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், கொள்ளையில் ஈடுபட்டது 25 வயதுடைய இளைஞர் என்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்தனர். சம்பவத்தின் போது கடையின் முன்பு சட்டையை இளைஞர் கழட்டி வீசி சென்றதும், சட்டைப்பைக்குள் பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு செல்லக்கூடிய பேருந்துக்கான டிக்கெட் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. கிணத்துக்கடவிலிருந்து இளைஞர் கோவை வந்திருக்கலாம் எனக் கூறி போலீசார் விசாரணையை முடக்கி விட்ட போது, அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.