கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கான நுழைவு கட்டணம் அரசாணைப்படி மாற்றப்பட்டுள்ளது.
அரசாணைப்படி மாற்றப்பட்ட கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மோயர் சதுக்கம், தூண் பாறைகள், குணா குகை ஆகியவற்றிற்கான நுழைவு கட்டணம் 10 ரூபாயில் இருந்து 30 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கேமரா மற்றும் வீடியோ கேமராக்களுக்கு 300 ரூபாயாகவும், ஸ்டில் கேமராக்களுக்கு 50 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தங்களில் பேருந்துகளுக்கு 100 ரூபாய், கார் மற்றும் வேன்களுக்கு ஐம்பது ரூபாயும், இரு சக்கர வாகனத்திற்கு 20 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.