சைலண்டாகா சம்பவம் செய்த அஸ்ரா கார்க் IPS.. பறந்த இறுதி எச்சரிக்கை

Update: 2024-07-25 06:25 GMT

கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் 466 வங்கி கணக்குகளை முடக்கி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்த சம்பவத்தை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.இந்த நிலையில் வடக்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் கடந்த 14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை சோதனையில் ஈடுபட்டனர்.

பல லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த அவர்கள், அவற்றை விற்பனை செய்து வந்தவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி வருகின்றனர்.

அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,

கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களின் 466 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

மேலும் கள்ளச்சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐஜி அஸ்ராகர்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்