பரபரப்பான சென்னையை, இரவில் பதற வைத்த கொலைச் சம்பவம்...
3 இரு சக்கர வாகனங்களில் சுற்றி வளைத்த கும்பலால் வெட்டிச் சரிக்கப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்...
சென்னை பெரம்பூரில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டை நண்பர்களுடன் சேர்ந்து தமிழக பகுஜன் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பார்வையிட வந்த நிலையில், இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது...
கண் இமைக்கும் நேரத்தில் சுற்றி வளைத்த கும்பலால், கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்...
ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்த வீரமணி மற்றும் பாலாஜி என்பவர்களும் சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில்... இதில், வலது காதில் 17 தையல்களும், முதுகில் 9 தையல்களுமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் வீரமணி...
அருகில் உள்ள உணவகத்தில் சாப்பாடு டெலிவரி எடுக்க வந்த செமோட்டோ ஊழியர்கள் போல், அவர்களின் ஆடைகளை அணிந்து வந்து கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது...
தாக்குதல் நடத்தி விட்டு, கும்பல் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, சென்னை மாநகரத்தின் பிரதான சாலைகளில் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கலும், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கலும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டது சென்னையை ஸ்தம்பிக்கச் செய்தது...
சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங்க்கின் உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு வந்த இயக்குநர் பா.ரஞ்சித் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுததும், மருத்துவமனையை சூழ்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் கத்தி கூச்சலிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, 10 தனிப்படைகளை அமைத்து விசாரணையை போலீசார் முடுக்கி விட்ட நிலையில், பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷுன் தம்பி ஆற்காடு பாலு உட்பட 8 பேர் போலீசில் சரணடைந்தது பரபரப்பை எகிறச் செய்தது...
இதில், கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டதும், இந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கின் பெயர் அடிபட்டதும் குறிப்பிடத்தக்கது...
இதனால், பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங்க் கொலை செய்யப்பட்டாரா என விசாரணையை தூசி தட்டிய போது விழுந்தது அடுத்த பொறி..
கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ், ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில், நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும், அவர்களை எதிர்த்து பாதிக்கப்பட்ட சிலருக்கு ஆம்ஸ்ட்ராங் பணம் பெற்று கொடுத்ததாகவும் கூறப்படுகிறது...
மேலும், இந்த விவகாரத்தில்... ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் இருந்து ஒரு தரப்பிற்கு மட்டும் பல கோடி ரூபாய் பணம் கைமாற்றப்பட்டதாகவும், இதில் ஆற்காடு சுரேஷூக்கும், ஆம்ஸ்ட்ராங்க்கும் பகை வளர்ந்ததாகவும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்...
இதனிடையே, தன்னுடன் எப்பவும் 15 ஆட்களை உடன் வைத்துக் கொண்டு வலம் வரும் ஆம்ஸ்ட்ராங், துப்பாக்கி ஒன்றை பாதுகாப்பிற்காக கையில் வைத்திருப்பார் எனவும் சொல்லப்படுகிறது...
சில நாட்களுக்கு முன்பே... ஆம்ஸ்ட்ராங்க்க்கு நேரப்போகும் விபரீதத்தை அவரிடம் தெரிவித்து உளவுத்துறை அலெர்ட் செய்ததாகவும், தன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என ஆம்ஸ்ட்ராங் பதில் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது...