மகனின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலியின் அண்ணனை கொன்ற தந்தை
மகனின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலியின் அண்ணனை கொன்ற தந்தை
அரியலூர் மாவட்டத்தில் தங்கையின் கள்ளக் காதலை கண்டித்த அண்ணனை கொலை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் சேனாபதி கிராமத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவரின் தங்கை தேவிக்கு திருமணமாகி, கணவன் மனைவிக்குள் தகராறு காரணமாக, தந்தை வீட்டில் தேவி வசித்து வருகிறார். இந்நிலையில் தேவிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை தேவியின் அண்ணன் சமுத்திரம் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக்கின் தந்தை கலியமூர்த்தி, தனது நான்கு மகன்களுடன் சமுத்திரத்தை தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த சமுத்திரம், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சமுத்திரத்தின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கலியமூர்த்தி மற்றும் அவரது மகன்கள் கார்த்திக், வாஞ்சிநாதன், ஸ்ரீகாந்த் கதிரவன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.