``பெண் விரிவுரையாளர்களிடம் டீன் அத்துமீறல்..'' - போராட்டத்தில் குதித்த விரிவுரையாளர்கள்...
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரியில், பணி நிரந்தரம் செய்யப்படாத பெண் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம், கல்லூரியின் டீன், பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து கடந்த பிப்ரவரியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஐந்து பேர் அடங்கிய குழுவினர்
மேற்கொண்ட விசாரணையின் முடிவுகள் இதுவரை
வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் பாலியல் சீண்டல்
குற்றச்சாட்டு அளித்த அதிஷ்ட லட்சுமி உள்ளிட்ட ஐந்து
ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு ஆணை வழங்க டீன் தரப்பு
ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக அவர்கள்
ஐந்து பேரும் தற்காலிக வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு வந்ததனர். டீனை கண்டித்து, பணி நீட்டிப்பு வழங்கப்படாத ஐந்து பேருக்கு ஆதரவாக அனைத்து விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் மூன்றாம் நாளாக
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். '