"அமைச்சருக்கு மிக நெருக்கமான சாராய வியாபாரி" - பகீர் கிளப்பும் அண்ணாமலையின் பதிவு

Update: 2024-06-29 06:27 GMT

அமைச்சருக்கு மிக நெருக்கமான சாராய வியாபாரி" - பகீர் கிளப்பும் அண்ணாமலையின் பதிவு

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் தண்டனைகள் கடுமையாக இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், போதைப்பொருட்கள் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையில், 1937-ஆம் ஆண்டின் தமிழ்நாடு மது விலக்குச் சட்டத்தில், திருத்த கோரும் மசோதா இன்று அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதை விமர்சித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஆண்டு 23 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்த பிறகும் மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் தண்டனைகள் கடுமையாக இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்