"உங்கள் நோக்கம் புரிந்துவிட்டது.." - அண்ணாமலை ஆவேச பதிலடி

Update: 2024-07-18 04:48 GMT

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதிய வன்முறைகளை தவிர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கமிட்டி, சமீபத்தில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நிகழ்ச்சியொன்றில் பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு, நூலகம், அறநெறி பற்றி பாஜகவுக்கு என்ன தெரியும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், நீதிபதி சந்துருவின் பேச்சுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அறிக்கை மூலமாக பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஜனநாயகத்தில், அரசின் பொதுமக்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிப்பது பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளின் பணி என்று தெரிவித்துள்ள அவர், திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதைத்தான் எதிர்ப்பதாக கூறியுள்ளார். அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நீதிபதி சந்துரு, அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம் எனவும், அதை விடுத்து, மக்களின் வரிப்பணத்தில், திமுகவின் கொள்கைகளை, குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இங்கே எதிர்ப்பு தெரிவித்திருப்பது, அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கைக்குத்தானே தவிர, தனிநபருக்கு அல்ல எனவும், அதற்குப் பதிலளிக்க வேண்டியது தமிழக அரசே தவிர, சந்துரு என்ற தனிநபர் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்