இன்று ஒரே மேடையில் அண்ணாமலையும், மோடியும் - கூடும் 5 லட்சம் பேர்?
திருப்பூரில் நடைபெற உள்ள என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று திருப்பூர் வர உள்ளார். பல்லடம் அருகே மாதப்பூரில், பொதுக்கூட்டத்திற்காக தாமரை வடிவில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் பேர் அமர்வதற்காக நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு போலீசார் மைதானம் முழுவதும் தீவீர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. ஆறாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கவும், பிற மாவட்டங்களில் இருந்து பல்லடத்திற்கு வரும் கனரக வாகனங்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள