அனுமன் ஜெயந்தியை ஒட்டி விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பஞ்சவடியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு 2 ஆயிரம் லிட்டரில் பாலாபிஷேகம் நடைபெற்றது... விஷேச திரவியங்களுடன் கூடிய சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது... மகா யாக சாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 130 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலையை 36 அடி உயர ஆஞ்சநேயருக்கு சாற்றுவதைக் காண திரளான பக்தர்கள் குவிந்தனர்...