சிரித்து கொண்டிருந்த மறுநொடி இளம்பெண்களை உள்ளே இழுத்து சென்ற கடல் - அலறல் சத்தம்.. பீதியில் மக்கள்

Update: 2024-06-03 12:55 GMT

ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தந்தாடி கடற்கரைக்கு இளம் பெண்கள் சிலர் சென்றுள்ளனர்... செட்டிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சகோதரிகளான ரத்தினம், கனகதுர்கா மற்றும் ஒரு இளம் பெண் ஆகியோர் கடலில் இறங்கி செல்பி எடுக்க முயன்ற போது வேகமாக வந்த அலை ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது... நிலைதடுமாறி கடலில் விழுந்து தத்தளித்த மூவரையும் அங்கிருந்த மீனவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் ரத்தினத்தையும் கனக துர்காவையும் அலை இழுத்துச் சென்ற நிலையில் மற்றொரு இளம்பெண் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார்... இருவரின் உடல்களும் கடலில் இருந்து மீட்கப்பட்டன.... போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்... ஆசை ஆசையாய் கடலுக்குச் சென்ற சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்