பதவி விலக வேண்டும்" - கொந்தளிக்கும் அன்புமணி, சசிகலா
தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும் என்றும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது, அரசின் இயலாமை என்றும் குறிப்பிட்டுள்ளார். கள்ளச்சாராயம் தொடர்பாக மூத்த அமைச்சர் துரைமுருகன், சமூகப் பொறுப்பு இல்லாமல் பேசி இருப்பதாகவும் அவர் விமர்சித்து உள்ளார். தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மதுவிலக்கு சட்டத்தை திருத்தி தாக்கல் செய்திருப்பது பயனற்றது என சசிகலா கூறியுள்ளார். தமிழக அரசைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் தற்போது வரை 65 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இந்த பழியைத் தவிர்ப்பதற்காக திமுகவினர் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நாடகம் ஆடுவதாகவும் விமர்சித்துள்ளார். கள்ளச்சாராயத்தை தடுப்பதற்கு கடினமான நடவடிக்கை எடுத்துள்ளதுபோல் ஒரு மாய பிம்பத்தை கட்டமைக்க திமுகவினர் முயற்சி செய்கிறார்கள் என்றும், திமுக ஆட்சியில் இருக்கும் வரை கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.