"முதலமைச்சர் சொல்லியும் இதுவரை குறைக்க வில்லை" அன்புமணி ராமதாஸ் கேள்வி

Update: 2024-01-18 14:33 GMT

அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப் பயன்பாட்டு மின்கட்டணத்தை குறைக்க வேண்டுமென, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 10 வீடுகள் 3 மாடிகளுக்கு குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம், ஓர் அலகுக்கு 8 ரூபாய் 15 பைசாவில் இருந்து, 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். 3 மாதங்களாகியும் கட்டண குறைப்பு செயல்படுத்தப்படவில்லை என்றும், உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்