``ஒருத்தனையும் விடாதீங்க.. மொத்தமா வேரறுங்க'' - ஃப்ரீ ஹேண்ட் கொடுத்த அமித்ஷா
பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை கூட்டம் நடத்தினார்...
நாட்டின் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வரும் புலனாய்வு அமைப்பின் பன்முகமை மையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்களுடன் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதில், மத்திய அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறையை பின்பற்றுமாறு அமித்ஷா அறிவுறுத்தினார். மேலும், தீவிரவாத கட்டமைப்புகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்வோரை வேரறுப்பதில் பாதுகாப்பு அமைப்புகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு தேவை எனவும் அவர் கூறினார்.