விண்வெளியிலிருந்து குறிவைத்த ரஷ்யா?.. குற்றஞ்சாட்டும் அமெரிக்கா

Update: 2024-05-23 16:34 GMT

விண்வெளியில் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட இதர

ஆயுதங்களை நிலை நிறுத்துவதை தடுக்க உலக நாடுகள்

இடையே ஐ.நா மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 16ம் தேதியன்று, விண்வெளியில் ரஷ்யா ஒரு செயற்கைக்கோளை நிலை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க

ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின்

செயற்கைக் கோள் ஒன்றின் சுற்றுப் பாதையில் ரஷ்யாவின்

செயற்கை கோளும் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

குறைந்த உயர சுற்று பாதையில் உள்ள இதர செயற்கைக்

கோள்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள்,

ரஷ்ய செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட முறையில், ரஷ்யா செயல்பட்டு வருவதாக கூறியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்