3 முறை காட்சி தந்த அம்பாள்.. "ஓம் சக்தி.. பராசக்தி.. ஓம் சக்தி" - மெய்சிலிர்த்து போன பக்தர்கள்

Update: 2023-10-28 02:03 GMT

திருச்செங்கோட்டில் 51 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக அம்மன் கோவில்களுக்கான தெப்ப தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான விஜயநகர பேரரசு காலத்தில் திரயம்க உடையார் என்பவரால் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது இங்கு பாரம்பரியமாக மாரியம்மன் திருவிழாவின் போது தெப்ப தேர் ஓட்டுவது வழக்கம் கடந்த 51 ஆண்டுகளுக்கு முன்பு 1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்ப தேர் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மேலும் தெப்ப தேர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தெப்பத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இந்த ஆண்டு மாரியம்மன் திருவிழா கடந்த 17 தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது வரும் 28ஆம் தேதி கம்பம் எடுக்கப்பட்டு தெப்பக்குளத்தில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது அதற்கு முந்தைய நாளான இன்று இரண்டாம் ஆண்டு நிகழ்வாக தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு பெரிய மாரியம்மன் சின்ன மாரியம்மன் அழகு முத்து மாரியம்மன் ஆகிய மாரியம்மன் களின் திருவுருவ சிலைகளை மின் ஒளியில் அலங்கரிக்கப்பட்டு தெப்பக்குளத்தை மூன்று முறை சுற்றி வந்தது தெப்பம் சுற்றி வரும்போது பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்தை முழங்கினர் மேலும் பாசுரங்கள் பாடியும் மந்திரங்கள் ஓதியும் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல நகர அமைப்பு குழு உறுப்பினர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் எப்ப உற்சவத்தில் கலந்து கொண்டு அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர் நகர காவல் ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்