அம்பை விவகாரம்..ஆதாரம் கேட்ட நீதிமன்றம்..அரசு கொடுத்த பதில் | Madurai High Court

Update: 2023-10-19 14:41 GMT

காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவரின் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் சிசிடிவி ஆதாரங்கள் இல்லை என, உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 10 அன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனக்கு வழங்க வேண்டும் என அருண்குமார் என்பவர், மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிசிடிவி ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டு, அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணை நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்