60 யானைகளின் உயிரை காத்த AI... நாடே மெய்சிலிர்த்த சம்பவம்... விதை போட்ட கோவை

Update: 2024-10-19 12:26 GMT

அசாமில் உள்ள ஹபாய்பூர் மற்றும் லாம்சகாங் இடையே ரயில் தண்டவாளத்தை, அக்டோபர் 16 அன்று இரவில் சுமார் 60 யானைகள் அடங்கிய கூட்டம் கடக்க முயன்றன. அப்போது அந்த பாதையில் சென்ற கம்ரூப் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுனர் மற்றும் அவரின் உதவியாளர்கள் அவசர கால பிரேக் போட்டு, அந்த யானைக் கூட்டத்தை காப்பாற்றியுள்ளனர். இதைப் பற்றிய வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகு, ரயில் ஓட்டுனர் தாஸ் மற்றும் உதவி ஓட்டுனர் உமேஷ் குமார் ஆகியோருக்கு பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார்.

ரயில் தடத்தை முழுமையாக உள்ளடக்கிய, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையிலான கண்டறிதல் அமைப்பு மூலம் ஓட்டுனர்கள் எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்தார். கோவை மதுக்கரையில் AI கண்காணிப்பு அமைப்பு, தெர்மல் கேமராக்கள் மற்றும் நிகழ்நேர எச்சரிக்கைகள் மூலம் யானை-ரயில் மோதல் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்