அதிமுகவில் இளைஞர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டுக்கு நாம் செய்த நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் இவ்வாறு அவர் கூறினார்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது