K.C.பழனிசாமி தொடர்ந்த வழக்கு.. ஐகோர்ட் அதிரடி

Update: 2024-08-17 08:18 GMT

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. பெயரில் இணையதளம் நடத்தி மோசடி செய்ததாக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி மீது காவல்துறையில் அதிமுக புகாரளித்தது. இதே புகாரை இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை மையமும் விசாரித்தது. அப்போது அதிமுக இணைய முகவரியை பயன்படுத்தக் கூடாது எனவும் 50 ஆயிரம் ரூபாயை அதிமுகவுக்கு அபராதமாக செலுத்தவும் உத்தரவிட்டது. இதனால் காவல்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி கே.சி. பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்